பென்ட்லி நிறுவனம், புதிய பிளையிங் ஸ்பர் ஹைபிரிட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பிளையிங் ஸ்பர் காரில் டபிள்யூ12 மற்றும் வி8 இன்ஜின்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது ஹைபிரிட்டாக அறிமுகம் ஆகியுள்ளதால், இதில் 2.9 லிட்டர் வி6 இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இடம் பெற்றுள்ளன.
இவை அதிகபட்சமாக 536 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4.3 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.5.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.