பெல்ஜியம் நாட்டில் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு பூசணிக்காய் படகுப்போட்டி நடத்தப்பட்டது. ராஜட்சத பூசணிக்காய்களுக்கு பிறப்பிடமான கெஸ்டார்லி பகுதியில் ஆண்டுதோறும் ஹாலோவீனை முன்னிட்டு பூசணிக்காய் படகுப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் 350க்கும் மேற்பட்டவர்கள் குழுக்களாக கலந்து கொண்டு துடுப்புகளுடன் பூசணிக்காய் படகை வேகமாக செலுத்தினர். இதனை கரையோரமாக நின்றபடி ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.











பெல்ஜியத்தில் களைகட்டிய பூசணிக்காய் படகுப்போட்டி: ஹாலோவீனையொட்டி நடத்த போட்டியில் மக்கள் உற்சாகம்
by Nithya