ஆண்கள் 5000 மீ. ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 13 நிமிடம், 21.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே ஆண்கள் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைன் வீரர்கள் பிர்ஹானு யெமடாவ் (13:17.40) தங்கம், ஃபிகாடு அட்மாசு (13:25.63) வெண்கலம் வென்றனர். இந்தியாவின் குல்வீர் சிங் (13:29.93) 4வதாக வந்து நூலிழையில் பதக்கத்தை நழுவவிட்டார்.