அதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம், உபர் கூல் எஸ்ஆர் 250 மற்றும் அன்பிரன்டேனியஸ் எஸ்ஆர் 125 என 2 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்திருந்தது. கீவே எஸ்ஆர் 125 ஏற்கெனவே விற்பனையில் உள்ள நிலையில், எஸ்ஆர் 250 பைக்கை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரிகள் நேற்று துவங்கியுள்ளது. முதல் 500 பைக்குகள் டெலிவரி பெறுபவர்களில் 5 அதிர்ஷ்டசாலிகளுக்கு நூறு சதவீத கேஷ்பேக் சலுகையையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, எஸ்ஆர் 250 பைக்குகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எஸ்ஆர் 250 ஷோரூம் விலை சுமார் ரூ.1.49 லட்சம். இதில் உள்ள 223 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 16.08 எச்பி பவரையும் 16 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எஸ்ஆர் 125 பைக் விலை சுமார் ரூ.1.19 லட்சம். இதில் உள்ள 125 சிசி இன்னின் அதிகபட்சமாக 9.7 எச்பி பவரையும், 8.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.