அசாம்: அசாமில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நடைபயணத்துக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பதாக அசாம் முதல்வர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ஜெய்ராம் ரமேஷ் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஸ்டிக்கர்களையும் கிழித்து எறிந்து பாஜகவினர் அத்துமீறல் என குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தண்ணீரை வீசி எறிந்து பாஜகவினர் அட்டூழியம்.