சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பாராட்டுகள், உங்களின் சிறப்பான பங்களிப்பு இந்த சர்வதேச அரங்கில் மாநிலத்தை பெருமை அடைய செய்துள்ளது என முதல்வர் தனது x வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.