Saturday, May 11, 2024
Home » `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண வந்துள்ளோம்’: தர்மசாலாவில் பேனருடன் 2 தமிழ் இளைஞர்கள் நெகிழ்ச்சி.! நேரில் அழைத்து `ஸ்பின் மாஸ்டர்’ வாழ்த்து

`அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண வந்துள்ளோம்’: தர்மசாலாவில் பேனருடன் 2 தமிழ் இளைஞர்கள் நெகிழ்ச்சி.! நேரில் அழைத்து `ஸ்பின் மாஸ்டர்’ வாழ்த்து

by Mahaprabhu

தர்மசாலா : இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்து சென்ற 2 இளைஞர்களையும், அஸ்வின் சந்தித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது 100வது டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அனில் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகள் அஸ்வினுக்கு சரியாக அமையவில்லை.

3வது டெஸ்ட் போட்டியின் போது பவுலிங் பார்முக்கு திரும்பிய நிலையில், அம்மாவின் உடல்நிலை காரணமாக அவசர அவசரமாக சென்னைக்கு திரும்பினார். பின்னர் 24 மணி நேரத்தில் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்தாலும் பெரியளவில் விக்கெட் வேட்டை நடத்த முடியவில்லை. ஆனால் 5 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நேரில் ஆதரவு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 2 இளைஞர்கள் தர்மசாலா பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள், “அஸ்வினின் தனித்துவ ஸ்பெஷல் ரெக்கார்ட் டெஸ்ட் போட்டியின் போதே அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளோம்’’ என்று பேனர் காட்டி பலரின் கவனத்தையும் அந்த 2 பேரும் ஈர்த்தனர். இந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் ரவிச்சந்திரன் அஸ்வின், இளைஞர்கள் சச்சின் மற்றும் முகேஷ் ஆகிய 2 பேரையும் நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஆட்டோகிராஃப் அளித்த அஸ்வின், அவர்களுக்கு நன்றி கூறினார். அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டியை காண்பதற்காக 2 பேரும் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து தர்மசாலா சென்றுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பேரையும் அஸ்வின் சந்தித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi