மாதவரம்: வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ஹூனா மேரி (30), திருநங்கை. இவரது அண்ணன் ரகு, ஆட்டோ ஓட்டி வருகிறார். ரகுவிற்கும், சோனியா என்பவருக்கும் திருமணமாகி அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்தது. இதில் ஹூனா மேரி தனது அண்ணனுக்காக நேற்று முன்தினம் காவல் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது சோனியாவின் உறவினர்கள் ஹூனா மேரியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹூனா மேரி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெகதீஷ் (38), அவரது மனைவி அமுலு (31) மற்றும் கல்பனா (48) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.