மும்பை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மூத்த சகோதரி ராஜேஸ்வரிபென் (64), கடந்த சில வாரங்களாக நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது உடல் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே தல்தேஜ் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அமித் ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அமித் ஷாவின் சகோதரி மறைவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.