சென்னை: அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் பண்ணையில் 2 நாட்களாக விநியோகம் பாதிப்பு என பால் முகவர்கள் கூறியிருந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூரில் இருந்து அம்பத்தூர் பண்ணைக்கு பால் வரத்து குறைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளதாவது; அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் தட்டுப்பாடு என்பது மிகவும் தவறான செய்தி எனவும் பால் வரத்தில் எந்த குறைபாடும் இல்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பால் வரத்து குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை, ஆவினில் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது என்பது ஆவின் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.