புதுடெல்லி: உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டு சிசோடியா சிறையில் உள்ளார். டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நீதிமன்ற காவலின் அடிப்படையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னதாக வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சிபி.ஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,” டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் இன்னும் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து சி.பி.ஐ கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 22ம் தேதி வரையில் நீட்டித்து உத்தரவிட்டார். இதே விவகாரத்தில் சஞ்சய் சிங்கின் நீதிமன்ற காவலும் பிப்ரவரி 22ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் உடல்நலம் குன்றியுள்ள மனைவியை சந்திக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி உடல்நலம் குன்றியுள்ள மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுக்கொள்கை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவி மற்றும் மருத்துவர்களை வாரம் ஒருமுறை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஆம் ஆத்மி தலைவருக்கு நிவாரணம் வழங்கியது.கடைசியாக கடந்த நவம்பரில் தீபாவளியின் போது உடல்நிலை சரியில்லாத மனைவியைச் சந்திக்க அவருக்கு காவலில் பரோல் வழங்கப்பட்டது. சந்திப்பின் போது மருத்துவரும் அவளைப் பார்க்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த ஏற்பாடு தொடரும். தில்லியின் முன்னாள் துணை முதல்வர், தனது மனைவியை வாரந்தோறும் சந்திக்க நீதிமன்ற காவலில் பரோலில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.