சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெறுமா ‘என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. மீண்டும் அதிமுகவை விமர்சித்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.