சோழிங்கநல்லூர்: காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (34). மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார். பெற்றோரை இழந்த இவரது உறவினரின் 8 வயது மகளை, ரம்யா வளர்த்து வருகிறார். சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம்தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் (47), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓடிவந்ததும், ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சிறுமியின் ரம்யா, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வந்தனர். நேற்று அதே பகுதியில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.