புவனேஸ்வர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சுமார் 275க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் ஒடிசாவின் ஜாஜ்பூர் சாலை ரயில் நிலையத்தில் புதன்கிழமை சரக்கு ரயில் மீது மோதியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.
கியோன்ஜாரில் பலத்த மழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழே தொழிலாளர்கள் மழைக்காக ஒதுங்கி இருந்தனர். ரயிலுக்கு அடியில் தொழிலாளர்கள் அமர்ந்து இருப்பதை அறியாத ஓட்டுநர் சரக்கு ரயிலை இயக்கியதால் அதில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர். ரயில்கள் தடம் புரள்வது தொடர் கதையாகி வரும் சூழலில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.