சென்னை: மலையாள படமான ஹிருதயம், 3 மொழிகளில் ரீமேக் ஆகிறது. மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள படம் ஹிருதயம். வினீத் சீனிவாசன் இயக்கி இருந்தார். ஹீரோவின் வாழ்க்கையில் வந்து செல்லும் பெண்களை பற்றிய கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்த படம், இப்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பெற்றிருக்கிறார். விரைவில் இந்த படத்தை அவர் 3 மொழியிலும் ரீமேக் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்….
3 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹிருதயம்
previous post