Thursday, May 16, 2024
Home » பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் போலீசாருக்காக 10 நடமாடும் கழிப்பறை: சென்னை போலீஸ் தகவல்

பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் போலீசாருக்காக 10 நடமாடும் கழிப்பறை: சென்னை போலீஸ் தகவல்

by Francis

சென்னை: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்களின் சிரமங்களை போக்கும் வகையில் 10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரில் குடியரசு தலைவர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழி பாதுகாப்பு பணி, திறந்தவெளியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், கட்சி கூட்டங்கள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு பணிக்கு ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் பணியின் போது இயற்கை உபாதைகள் கழிக்க குறிப்பாக பெண் காவலர்கள் சிரமப்படுவதை தடுக்கும் வகையில் ெசன்னை மாநகர காவல்துறை சார்பில் 10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர காவல்துறையில் உள்ள 4 மண்டலங்களுக்கு தலா 2 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கழிப்பறை வாகனத்திலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றுவதற்கு ஒரு சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ள ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, பெண் காவலர்களின் நலனுக்காக ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் ரூ.5 நாணயம் செலுத்தி நாப்கின்கள் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்கான 3 கழிப்பறை வாகனங்களை பெண் காவலர்களே ஓட்டி வருகின்றனர். காவலர்கள் பயன்படுத்தும் கழிப்பறை வாகனங்கள் சுத்தமாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படாத வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது.  ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமை செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

16 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi