விகேபுரம்: விகேபுரம் அருகே தெற்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடை விளை, ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இசக்கி சுப்பையா எம்எல்ஏ பங்கேற்று, வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கின்ற வேட்பாளரை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர்கள் மாரிமுத்து, இமாகுலேட், மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, சிங்கை அருண், அரிச்சந்திரன், அருண் தபசு, வக்கீல்கள் செல்வ அந்தோணி, ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.