Sunday, June 2, 2024
Home » வதந்திகளுக்கு விளக்கம் அளிக்க வீடியோவில் பாடினார் இளையராஜா

வதந்திகளுக்கு விளக்கம் அளிக்க வீடியோவில் பாடினார் இளையராஜா

by kannappan

சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜா உடல்நிலை குறித்து நேற்று முன்தினம் இரவு வதந்தி பரவியது. இது குறித்து விசாரித்தபோது, இளையராஜா நலமுடன் இருப்பதாகவும், ஆங்கில புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை கோயிலுக்கு ெசன்றிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று இளையராஜா வெளியிட்ட வீடியோ பதிவில், காரில் பயணித்தபடியே தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லும் விதமாக, கமல்ஹாசன் நடிப்பில் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் தன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘இளமை இதோ இதோ… இனிமை இதோ இதோ’ என்ற பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது….

You may also like

Leave a Comment

10 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi