Saturday, May 25, 2024
Home » ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டு வசதிக்கடன் சிறப்பு முகாம்

by Ranjith

 

ஈரோடு,ஏப்.26: ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி சத்தியமங்கலம் ஆகிய கிளைகளில் இன்று (26ம்தேதி) மற்றும் நாளை (27ம்தேதி)ஆகிய 2 நாட்கள் வீட்டு வசதி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஈரோட்டில் முனிசிபல் காலனி, சக்தி விநாயகர் கோவில் அருகிலும், பெருந்துறையில் ஈரோடு ரோடு,பங்களா தெருவிலும், பவானியில் காளிங்கராயன்பாளையம், செல்லாண்டியம்மன் கோவில் எதிரிலும், கோபியில் மொடச்சூர் ரோடு,யுனிவர்சல் பில்டிங்கிலும், சத்தியமங்கலத்தில் மைசூர் டிரங்க் ரோடு, பேருந்து நிலையம் அருகிலும் உள்ள கிளைகளில் நடைபெறும் இச் சிறப்பு முகாமில் கடனுக்கான முன் அனுமதி கடிதம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறப்புச் சலுகையாக 1 சதவீதம் நிர்வாகக் கட்டணம் மற்றும் பரிசீலனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. டிடிசிபி அப்ரூவல் வீட்டு மனை வாங்கவும்,வீடு கட்டவும், வீடு மற்றும் அடுக்குமாடி கட்டிடம் வாங்கவும்,வீடு பழுது பார்க்கவும்,விஸ்தரிக்கவும், வணிக வளாகம், திருமண மண்டபம், வர்த்தக கட்டிடங்கள் கட்டவும், பிற வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் நிலுவையில் அதிக வட்டியில் உள்ள வீட்டு வசதி கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகையைப் பெற்றிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

9.90 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு: ஈரோடு 94449 76942 , பவானி 78258 91639, பெருந்துறை 86673 42942, கோபி 89398 67165, சத்தியமங்கலம் 89398 92823 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi