Tuesday, May 28, 2024
Home » ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

by kannappan

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை க.சுந்தர் எம்எல்ஏ  வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் அமுதா தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்  சுஜாதா வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 68 மாணவ – மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், மாணவ – மாணவிகளின் கல்விதரத்தினை மேம்படுத்திடும் வகையில் தமிழக முதல்வர் படைப்பான நான் முதல்வர் உயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகத்தினை வழங்கினார். நிகழ்வின்போது, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் இரத்தினமாலா உட்பட பலர் உடனிருந்தனர். …

You may also like

Leave a Comment

seventeen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi