மொடக்குறிச்சி, மே 19: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 949 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கருப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.140.69க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.118.23க்கும், சராசரி விலையாக ரூ.134.99க்கும். சிவப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.143.62க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.115.09க்கும், சராசரி விலையாக ரூ.134.42க்கும். வெள்ளை ரகம் கிலோ ஒரே விலையாக ரூ.136.69க்கு ஏலம் போனது. மொத்தம் 70 ஆயிரத்து 882 கிலோ எடையுள்ள எள் ரூ.95 லட்சத்து 52 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது.