ஈரோடு, ஏப். 5: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 5,928 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், முதல் தரக் கொப்பரைகள் 2,859 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.
இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.89.49க்கும், அதிகபட்சமாக ரூ.99.00க்கும் விற்பனையாகின. 2ம் தரக் கொப்பரைகள் 3,069 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.22.13க்கும், அதிகபட்சமாக ரூ. 90.89க்கும் விற்பனையாகின. மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் கிலோ கொப்பரைகள் ரூ.1 கோடியே 51 லட்சத்துக்கு விற்பனையானது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.