சென்னை: தமிழக ஓமியோபதி துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி சார்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2021-2022ம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை 3.11.2021 முதல் 25.11.2021 முடிய மாலை 5 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.விண்ணப்பக் கட்டணம் விருப்பப் படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவம் ரூ.500, சிறப்பு பிரிவு விண்ணப்பம் ரூ.100 பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவத்தை தபால், கூரியர் சேவையின் மூலமாகவோ, நேரிலோ சமர்பிக்கும்போது விண்ணப்பக் கட்டண தொகையான ரூ.500 SBI Collect வழியே செலுத்த வேண்டும். பொது விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25.11.2021 மாலை 5.30 மணிக்குள், செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். …