மதுரை, மார்ச் 28: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சத்து 28 ஆயிரத்து 205 வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும். இதன்படி நேற்று, மீனாட்சிம்மன் கோயில் மற்றும் 10 உப கோயில்களின் உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை கணக்கிடும் பணிகள், கோயிலின் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இப்பணியில் கோயிலின் அறங்காவலர்கள், உதவி ஆணையர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.96 லட்சத்து 28 ஆயிரத்து 205 ரொக்கம், 467 கிராம் தங்கம், 605 கிராம் வெள்ளி மற்றும் 367 வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்ததாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.