சேலம், ஏப். 27:சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கில், இன்று (27ம் தேதி) காலை 11 மணிக்கு மாமன்ற இயல்பு கூட்டம் நடக்கிறது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகர பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இத்தகவலை மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.