Monday, June 17, 2024
Home » பெண்ணின் பெருங்கனவு

பெண்ணின் பெருங்கனவு

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர் ஆண் ‘உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவேன்’ என்று சொல்லும்போதும் பெண் மனம் இவனை நம்பலாமா, எந்தளவுக்கு நம்பலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். இவ்வளவு கேள்விகளுக்கும் ஒருவன் சரியான விடையளித்து பாஸாகி விட்டாலும், அவனோடு இணைந்து வாழத் துவங்கும்போதும் பெண் தனது காமத்தீயின் வெப்பத்தை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அவளது காமத்தீயை முழுவதுமாக உணர்ந்து, அணைத்து, ஆண்மை மழையில் நனைந்து அவளை இன்புறச் செய்யும் தருணங்கள் அவளை நன்றிக்குரியவளாக மாற்றுகிறது. தன் துணையை உச்சகட்ட இன்பம் என்கிற ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யும் ஆணுக்கு இது அதிகம் கிட்டும்.ஒவ்வொரு முறை தாம்பத்ய உறவுக்கான முனைப்பின்போது பெண் ஆர்கஸம் அடையும் வரை காத்திருந்து, அதற்கான வித்தைகளை அரங்கேற்றும் அளவுக்கு விழிப்புணர்வும், அன்பும் இன்றைய ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாக உள்ளது’’ என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.தாம்பத்ய உறவில் ஆண் உச்ச கட்டத்தை எட்டுவது பற்றி இங்கு அதிகம் பேசப்படுகிறது, விவாதத்துக்கும் உள்ளாக்கப்படுகிறது. ஆனால், தாம்பத்ய உறவில் பெண் உச்சம் அடைவது பற்றிய விழிப்புணர்வே குறைவாகத்தான் உள்ளது. அப்படியே தெரிந்தாலும் அந்த ஆண் ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும் இதனை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. கோபத்தில் உள்ள மனைவியை சமாதானம் செய்ய சில ஆண்கள் இதை ஒரு வழியாகப் பின்பற்றுகின்றனர். ஆனால், பெண் உச்சம் அடைவது மட்டுமே காமத் திருவிழாவை முழுமை செய்யும். இருவருக்குமேபேரின்பம் அள்ளித்தரும்.இதற்கு முதலில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பற்றிய தெளிவான புரிதல் தேவை. சிறுநீரை வெளியேற்றுவதும், விந்து வெளியேற்றமும் ஆண்களுக்கு ஒரே பாதையில் நடக்கிறது. ஆனால், பெண்களுக்கு சிறுநீர் கழிக்க தனிப்பாதை, தாம்பத்ய உறவு கொள்ளத் தனிப்பாதையும் உள்ளது. எந்தப் பகுதியில் உறவு கொள்ள வேண்டும் என்று ஆண்களுக்கு இருக்கும் அறியாமையால், குழந்தைப் பிறப்பு தள்ளிப்போன நிகழ்வுகளும் உள்ளன. தாம்பத்ய உறவில் பெண் எப்படியெல்லாம், எப்போதெல்லாம் திருப்தி அடைகிறாள் என்பது பற்றி ஆண் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்ணின் யோனிப்பாதையில் ஆணுறுப்பைச் செலுத்தி இயக்குவதால் மட்டும் அவள் முழுமையான திருப்தியடைவதில்லை. தாம்பத்ய உறவில் அந்த இயக்கத்தின்போது பெண் அந்தவிதமாகவும் இன்பத்தை அடைகிறாள். காமத்திருவிழாவில் ஆண் பெண் இருவருக்கும் உச்ச கட்டம் என்பது வெவ்வேறு நேரத்தில் நிகழ்கிறது. அதை ஒரே நேரத்தில் நிகழ வைப்பதுதான் காமத்தில் உள்ள சூட்சுமம். உச்ச கட்டம் என்பது ஆணுக்கு விரைவாகவும், பெண்களுக்கு கொஞ்ச நேரம் கழித்தும் நிகழ்கிறது. அதிலும் விந்து முந்துதல் பிரச்னை உள்ள ஆண்களால் அவ்வளவு சீக்கிரம் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாது. விந்து முந்துதல் பிரச்னையைச் சரி செய்து இதற்கான தீர்வு காண முடியும். இது சரி செய்ய முடியாத பிரச்னை அல்ல. தாம்பத்யம் நீண்ட நேரம் தொடர்ந்து இன்பத்தில் மூழ்க முன் விளையாட்டுகள் மிக முக்கியம். சீண்டலும், தீண்டலும், காமம் தூண்டலும் பெண்ணுக்குள் காதல் பெருமழைக்கான காமக் கதவுகள் திறந்து வைக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் கட்டிக் கொள்ளாமல், முத்தமிடாமல் கடமையே என சில நிமிடங்களில் ஆண் தனது வேலையை முடித்து விடுகிறான். அந்த உறவில் அவனுக்கான இன்பம் கிடைத்து விடுகிறது. பெண் தனக்குள் என்ன நடந்தது, அவன் என்ன செய்தான், அவ்வளவுதானா என்ற கேள்விகளை மௌனமாக விழுங்குகிறாள். இந்தச் செயல் சம்பந்தப்பட்ட ஆணின் மீதான வெறுப்பாக வளர்கிறது. ஆண் தனது விந்தை வெளியேற்றுவதற்கான கழிவறையாகப் பெண்ணைப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு முன்பாய் அன்பாய் அரவணைப்பாய், ரொமாண்டிக்காய் பேசி பெண்ணுக்கு காதல் மூடேற்றும் வேலையை பல ஆண்கள் செய்வதில்லை. இதற்கு பதிலாய் ரகசியக் காதலிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களது அங்கங்களை, அழகை வர்ணித்து ரகசியமாகவே எல்லாவற்றையும் கொண்டாடுகின்றனர். இதுபோன்ற செயல் கணவன் மனைவிக்குள்ளான நெருக்கத்தை உடைத்து விலகச் செய்கிறது. மனைவியுடன் இது போன்ற செல்லப் பகிர்வுகள் நிறைந்த பலன் தரும். எத்தனை ரகசிய உறவுகளை ஆண் ஏற்படுத்திக் கொண்டாலும் அவன் மனைவியுடன் தான் எந்தவித அச்சம், குற்ற உணர்வும் இன்றி தாம்பத்ய உறவில் ஈடுபட முடியும். ஆர்கஸத்தை அள்ளிக் கொடுத்து ஆண் அவளது அன்புக் கடலில் மூழ்க முடியும். காதல் நெருக்கம் கூட்ட ரொமான்ஸ் பயன்படுவது போல காமம் பற்ற வைக்கவும் ரொமான்ஸ் முக்கியம். வயது 16 ஆனாலும் சரி, 60 ஆனாலும் சரி காதல் கலந்த குழந்தைத் தனத்துடன் உங்கள் மனைவியுடன் எப்போதும் ரொமான்ஸை வெளிப்படுத்துங்கள். மல்லிகைப்பூவும், அல்வாவும் போதும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியில் வாருங்கள். இன்று மல்லிகையைப் போன்ற மெல்லிய காமத்தையே பெண்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, ஆண்கள் காமப் பொழுதில் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதுபோன்ற அவசர அணுகுமுறையை குறைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல அவளின் உணர்வு மொட்டுக்களை மென்முத்தம் கொண்டு காதல் வாசம் பரவச் செய்ய வேண்டும்.மென் முத்தம் சாரலாகித் தூரலாகி ஆலங்கட்டி மழையாகி அவளின் அந்தரங்க இடங்களில் ஆணின் இதழ்கள் பரவிட வேண்டும். அணிலாய், பூனைக்குட்டியாய் அவதாரம் எடுத்து அவளது அங்கம் எங்கும் கவ்விக் கடித்து, நாவால் வருடி அத்தனை செல்களிலும் காமத் தீயைப் பற்ற வைக்க வேண்டும்.அவள் தன்னைப் பனித்துளியாக உணரும் தருணத்தில் ஆண் காமச் சுடர்களை ஏற்றித் தூண்ட வேண்டும். அவள் காமத் தீயில் ஜொலிக்கும் தருணம் மழை செய்து… கடல் செய்து போதும் போதும் என அவள் திணற, இவன் தித்திக்க அட யார் முடிக்க, யார் தவிக்க என்ற அன்புப் போட்டியில் வார்த்தைகள் மழலையில் தோய்ந்து இருவரும் குழந்தையாவதை உணரலாம். ஆண் விரைவாக உடலுறவை முடித்துக் கொண்டால் காமம் சிறக்காது. உறவில் தனக்குத் தேவையான சுகம் கிடைக்கும் வரை மட்டுமே பெண்ணைப் பயன்படுத்திக் கொண்டு காமத்தின் முழுமையை அப்பெண் உணரச் செய்யாமல் பெண்ணின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தாமல் ஆண் விலகுவது எப்படி முழுமையடையும். இப்படியான நேரங்களில் பெண் வஞ்சிக்கப்படுகிறாள். ‘பெண் என்பவள் ஆணின் தேவை முடிந்ததும் விலகியிருக்க வேண்டும். பெண்ணுக்கு என தனி மனம், சுகம் என எதுவும் இல்லை. அவள் ஆணுக்கான விளையாட்டு பொம்மை’ என்பது போன்ற தவறான எண்ணம் கொண்ட ஆண்கள் தாம்பத்யத்தில் தோல்வியடைகின்றனர். திருமண வாழ்வு தோல்வியில் முடிவதற்கு உடலுறவில் ஆண்கள் தோல்வி அடைவதும் முக்கியக் காரணம் ஆகும். பெண்ணின் மனதை, உணர்வுகளின் ஆழத்தை புரிந்துகொண்டு ஓர் ஆண் செயல்படும்போது வெற்றி கிடைக்கும். உடலுறவில் ஆண் அடையும் வெற்றி அவனுக்கு மட்டும் சொந்தமானதில்லை. தனது இணைக்கும் அந்த வெற்றி இன்பம் அளிக்கும். பரஸ்பர புரிதலை உண்டாக்கும். காமம் பரந்த கடல். அதில் ஒரு சிறு பகுதி தன் இணையின் காம உணர்வுகளை அறிந்து செயல்படுவது. இதில் மாய வித்தைகள் எதுவும் இல்லை. அத்தனையும் காம வித்தைகள். பொறுமை, நேசம், காதல் போதும். ஆணால் சாதிக்க முடியும். உச்ச இன்பத்தில் பெண்ணை திணறச் செய்ய முடியும். மன்மதக் கலை ஆணுக்கு மட்டும் சொந்தமானதில்லை. பெண்களுக்கும் பொருந்தும். கலவியில் பெண்களின் வெற்றியைப் பொறுத்தே ஆணுக்கு மன்மதப்பட்டம் அந்த மாய உலகில் ஆணுக்குக் கிடைக்கும். உடலுறவின் முழு இன்பம் பெறுதல் என்பது கூடலின் வேள்வியில் இருவரும் மறைந்து ஒன்றாதல் எனும் நிலையை உணர்வது. உணர்வுப் பிழம்பில் ஒன்றாகும் முன்பே பெண்ணை விட்டு விலகுதல் நேர்மை இல்லை. தனது மனைவிக்கு முழுத் திருப்தி தர முடியாத ஆண் பல பெண்களைத் தேடி தவறான பாதைக்குச் செல்கிறான். தனது குறைபாட்டை மறைப்பதற்காக வாழ்வியல் கோட்பாடுகளை மாற்றிக் கொள்கிறான். அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் சிறிது காலத்தில் எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவுகிறான். பல நேரங்களில் தோல்வியுடன் பாலியல் நோய்களுக்கும் ஆளாகின்றனர். ஆணின் பாலியல் நோயைத் தேவையில்லாமல் பெற்று வாழும் மனைவியையும் மருத்துவமனைகளில் பார்க்கலாம். காமத்தில் பெண்கள் எதிர்பார்ப்பது உறுப்புகளால் உறவு கொள்வது மட்டுமல்ல; உடலுறவில் ஆண் திருப்தி அடைந்த நிலையில் தன்னை விட்டு விலகாமல் ஆரத்தழுவி, கட்டியணைத்து அன்பாக வார்த்தைகளில் விளையாடுதல், வழங்கிய சுகத்துக்காக மனமுவந்து நன்றி தெரிவித்தல், காமம் பூசாத நெற்றி முத்தமிடுதல் போன்ற செயல்கள் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்புகளின் செயல்பாட்டால் கிடைத்ததை விட பல மடங்கு இன்பத்தை அளிக்கிறது. இதனை உடலுறவுக்குப் பின் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எங்கே நேரம் என்று சலித்துக் கொள்கிறீர்களா? தவறான கோட்பாடு உங்களுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள்.காமத்தின் முடிவில் இருவருமே தோற்பதுதான் முறை. காமத்தால் ஆண் மட்டுமே வீழ்ந்து பெண்ணை வெற்றி பெறச் செய்வது முறையல்ல. காமத்தில் வீழ்வதுதான் வெற்றி. வெற்றிதான் தோல்வி. இதுவே காம சூத்திரம். பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து போலி மருத்துவர்களிடம் சிக்க வேண்டாம். காமம் பற்றிப் பொறுமையான விவாதங்களும் மருத்துவ ஆலோசனையும் போதும் எல்லாம் சுகம் பெறும். உங்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளும் இணையை ஒவ்வொரு முறையும் ஆர்கஸம் வரை அழைத்துச் சென்று அன்பு செய்யுங்கள். அவள் உங்களது பேரன்பின் பிரதியாகிப் போவாள். காமத்தில் முழுமையாக மூழ்கி தன்னை மறந்திடும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உள்ளது. அந்த உரிமையை மறுப்பது ஆணுக்கு அழகல்ல!( Keep in touch… )எழுத்து வடிவம்: கே.கீதா

You may also like

Leave a Comment

one + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi