சென்னை : சென்னையில் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது.தங்கத்தின் விலை நேற்றும் ஏற்றம் கண்ட நிலையில், இன்று அதைவிட ஏற்றம் கண்டுள்ளது. கடந்த சில தினங்களாக ஒரு நாள் ஏற்றமாகவும், மற்ற நாள் இறக்கமாகவும் இருந்து வந்தது. நேற்றைய விலையை விட தங்கத்தின் விலை 1 கிராமுக்கு இன்று 20 ரூபாய் அதிகரித்துள்ளது இதனால் நகை வாங்கும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.சென்னையில் இன்று (பிப்ரவரி 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,578 ஆக ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,558 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 36624 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.00 ஆக இருந்தது. இன்று அது ரூ.66.80 ஆக 1 ரூபாய் 80 பைசா உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது….