Wednesday, May 15, 2024
Home » நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பெரும்பாலான நகராட்சிகளை கைபற்றுகிறது திமுக; அதிமுக படுதோல்வி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பெரும்பாலான நகராட்சிகளை கைபற்றுகிறது திமுக; அதிமுக படுதோல்வி

by kannappan

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி,138 நகராட்சிகள்!!திமுக கூட்டணி : 125அதிமுக கூட்டணி : 6பிற கட்சிகள் :5* ராசிபுரம் நகராட்சியில் திமுக 8 வெற்றி; அதிமுக 2, விசிக மற்றும் சுயேட்சை தலா ஒன்றில் வெற்றி * மன்னர்குடி நகராட்சியில் 14-ல் 12 வார்டில் திமுக வெற்றி; அதிமுக, சுயேட்சை தலா 1-ல் வெற்றி.* மேட்டுப்பாளையம்  நகராட்சியில் 12 வார்டுகளில் 10-ல் திமுக வெற்றி; 2 வார்டில் அதிமுக வெற்றி.* பொள்ளாச்சி நகராட்சியில் 14 வார்டுகளில் 11-ல் திமுக வெற்றி; அதிமுக 2, சுயேட்சை 1-ல் வெற்றி.* பட்டுக்கோட்டை நகராட்சியில் 12 வார்டுகளில் 6-ல் திமுக வெற்றி; அதிமுக 4, சுயேட்சை 2 வார்டில் வெற்றி.* மானாமதுரை நகராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 5 வார்டுகளில் வெற்றி.* பொள்ளாச்சி நகராட்சியில் 36-ல் 14 வார்டில் திமுக வெற்றி; அதிமுக 2, சுயேட்சை 1 வார்டில் வெற்றி.* கோவில்பட்டி நகராட்சியில் 24-ல் 17 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 3, அதிமுக 2, அமமுக, பா.ஜ.க. தலா 1 வார்டுகளில் வெற்றி.* விருதுநகர் நகராட்சியில் 30-ல் 26 வார்டுகளில் திமுக வெற்றி; சுயேட்சை 2, அதிமுக, அமமுக தலா 1 வார்டில் வெற்றி.* குளித்தலை நகராட்சியில் 24-ல் 21 வார்டுகளில் திமுக வெற்றி; அதிமுக1-ல் வெற்றி.* லால்குடி நகராட்சியில் 10 வார்டில் 8-ல் திமுக கூட்டணி, அதிமுக, சுயேச்சை தலா 1-ல் வெற்றி.* ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வெற்றி.* வேதாரண்யம் நகராட்சியில் 9-வது வார்டில் திமுக வெற்றி.*  திருத்துறைப்பூண்டி, அம்பாசமுத்திரம், சத்தியமங்கலம், துவாக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது.* வால்பாறையில்’ 21 வார்டுகளில் 19 இடங்களில் வென்று, நகராட்சியை திமுக கைப்பற்றியது. அதிமுக, சுயேட்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.*  திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கைப்பற்றுகிறது.* விருதுநகர், காங்கேயம், பொள்ளாச்சி, மேலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியது….

You may also like

Leave a Comment

fourteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi