திண்டுக்கல், ஜூலை 20: திண்டுக்கல் மாநகராட்சி திமுக இளைஞர் அணி பதவிக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, மாநகர துணை செயலாளர்கள் அழகர்சாமி, முகமது சித்திக் முன்னிலை வகித்தனர். துணை மேயர் ராஜப்பா தலைமை வகித்து, திண்டுக்கல் மாநகரத்தில் பகுதி வாரியாக இளைஞர் அணி பதவிக்கான விண்ணப்பத்தினை வழங்கினார். இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் படிவத்தை வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாநகர பொருளாளர் சரவணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரகுமான், துணை அமைப்பாளர்கள் நாகேந்திரன், செபாஸ்டின், மீரான் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.