ஊட்டி, டிச. 3: ஊட்டியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஊட்டியில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவில் தீட்டுக்கள் பகுதி உள்ளது. இப்பகுதி வழியாகவே பார்சன்ஸ் வேலி மற்றும் போர்த்திமந்து ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதுதவிர, ஏராளமான பழங்குடியினர் வசிக்கும் செல்லும் முக்கிய சாலையாக தொழிற்சாலை உள்ளது. ஆனால், இச்சாலையில் ஊட்டி படகு இல்லம் முதல் தீட்டுக்கள் செல்லும் வரை சாலையில் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், இந்த பள்ளங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், இப்படி தடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் வழித்தடத்தில் செல்பவர்கள் இந்த பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தீட்டுக்கல் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.