Friday, May 10, 2024
Home » தயாரிப்பாளர் ஆனார் மஞ்சு வாரியர்

தயாரிப்பாளர் ஆனார் மஞ்சு வாரியர்

by kannappan

சென்னை: மலையாள படத்தை முதல் முறையாக தயாரித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். கணவர் திலீப்பை பிரிந்த பிறகு, மலையாளத்தில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது தம்பிக்காக தயாரிப்பாளராக மாறியுள்ளார் மஞ்சு வாரியர். இவரது தம்பி மது வாரியர், திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு, சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லலிதம் சுந்தரம் என்ற படத்தின் கதையை அவர் உருவாக்கியிருந்தார். இதை கேட்டு, தானே தயாரிக்க முடிவு செய்தார் மஞ்சு வாரியர். அதன்படி படத்தை மது வாரியர் இயக்கி முடித்துவிட்டார். இதில் ஹீரோயினாகவும் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்தில் அவர் தொழிலதிபராக நடித்துள்ளார். அவரது கணவராக பிஜு மேனன் நடித்திருக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து படம் உருவாகியுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படத்தை வெளியிட இருக்கிறார் மஞ்சு வாரியர்….

You may also like

Leave a Comment

14 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi