சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …