சென்னை: தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 65. சில நாட்களுக்கு முன் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இது குறித்து பரேஷ் ராவல் கூறும்போது, ‘எதிர்பாராதவிதமாக எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. கடந்த 10 நாளில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்….