Monday, June 17, 2024
Home » தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் ரூ.1231 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் ரூ.1231 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by kannappan

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1231.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின் வழங்கினார். இன்று (30.12.2021) தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற அரசு விழாவில், 98 கோடியே 77 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  முடிவுற்ற 90  திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 894 கோடியே 56 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட இராஜப்பா பூங்கா மற்றும் சரபோஜி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 309 புதிய கடைகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவிடைமருதூர் மற்றும் பாபநாசத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், காட்டுத்தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலக வளாகம், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2 கோடியே 95 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயரின கால்நடை பெருக்குப் பண்ணை மற்றும் 4 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மல்லிப்பட்டிணத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் வல்லவன் பட்டிணத்தில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடிகள், வணிக வரி மற்றும்  பதிவுத்துறை சார்பில்  2 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக்   கட்டடம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிள்ளையார்பட்டியில்  கட்டப்பட்டுள்ள மண்டல கலை பண்பாட்டு மையக் கட்டடம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் 1 கோடியே 46 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பள்ளிக் கட்டடங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 16 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கண் மருத்துவமனைக்  கட்டடம், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் 6 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை கோட்டம், ஆவணத்தில் அமைக்கப்பட்டுள்ள 33/11 கே.வி. துணை மின் நிலையம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 22 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 20 கோடியே 35 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 62 பணிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 34 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பணிகள் என மொத்தம்  98 கோடியே 77 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 90 முடிவுற்ற  திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கும்பகோணம் நகராட்சி சார்பில் 24 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 80 பணிகள், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் 5 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி தகன மேடையை நவீன எரிவாயு தகன  மேடையாக மாற்றம் செய்யும் பணி மற்றும் மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக மேம்படுத்தும் பணி, பேரூராட்சிகளின் சார்பில் 11 கோடியே 57 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 பணிகள், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 149 கோடியே 32 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வல்லம் பேரூராட்சி, அய்யனார் கோவில் பகுதி-2, நகர்ப்புர ஏழை எளியோருக்கு நிலையான ஒன்றிணைந்த வீடுகள் கட்டும் பணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 42 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குருவிக்கரம்பை மற்றும் அம்மாபேட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும்  குடியிருப்பு  கட்டடங்கள் கட்டும் பணி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை வட்டம், கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் மீன்இறங்குதளம் அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2 கோடியே 76 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தானிய கிடங்கு, அங்கன்வாடி கட்டடங்கள், ஊராட்சி மன்றக் கட்டடங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடம் போன்ற 16 பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் 686 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பணிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பணி என மொத்தம் 894 கோடியே 56 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு முதலைமைச்சர் அடிக்கல் நாட்டினார்.பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகளின் விவரங்கள்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8,416 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மாதாந்திர ஓய்வூதியம், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்குதல்,  2,922 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 5,306 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்குதல், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தில் 3,500 பயனாளிகளுக்கு நிதியுதவி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 55 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கண்ணொளித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவித்திட்டம் ஆகிய திட்டங்களில் 2,226 பயனாளிகளுக்கு உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 941 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 139 பயனாளிகளுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்க நல உதவி, டாம்கோ கடனுதவி, நரிகுறவர் நலவாரியம், டாப்செட்கோ கடனுதவி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6,000 பயனாளிகளுக்கு ரோட்டாவிட்டர், பேட்டரி ஸ்பேரயர், நீர்தெளிப்பான், தார்பாலின், உளுந்து, விவசாயப் பண்ணை கருவிகள் விநியோகம், தோட்டக்கலை மற்றும் பட்டு வளர்ப்புத் துறை சார்பில் 1,005 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம், எண்ணெய் பிரித்தெடுக்கும் மரச்செக்கு, தானியங்கி தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், சூரியசக்தி மோட்டார் பம்ப் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 1,050 பயனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியம், திருமண நிதியுதவி, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, பெட்ரோலில் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள், கல்வி உதவித் திட்டம், காதொலிக் கருவிகள் வழங்குதல், கூட்டுறவுத்துறை சார்பில் 6,211 பயனாளிகளுக்கு பயிர் கடன், மத்திய கால விவசாய கடன், சிறு வணிகக் கடன், பண்ணை சாராக் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், கறவைமாடு பராமரிப்பு கடன் வழங்குதல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 852 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (மகளிர் திட்டம்) சார்பில் 5,627 பயனாளிகளுக்கு சூழல்நிதி, சமுதாய முதலீட்டு நிதி, நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நிதி, வங்கி நேரடி கடன் இணைப்பு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,  சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், எஸ். சண்முகம், எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க. அன்பழகன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார், பூண்டி கே. கலைவாணன், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

11 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi