Monday, May 20, 2024
Home » சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ₹190 கோடியில் 2,084 உட்புற சாலைகள் சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ₹190 கோடியில் 2,084 உட்புற சாலைகள் சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

by MuthuKumar

சென்னை: சென்னையில் மாநகராட்சி சார்பில் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, சென்னையில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பருவமழைக்கு பின்பு சாலை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ₹55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ₹29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ₹39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ₹124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ₹190 கோடிக்கு உட்புற சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கி.மீ கொண்ட 1661 உட்புற சாலைகளை ₹131 கோடி செலவிலும், 34 கி.மீ நீளம் கொண்ட 309 கான்கிரீட் சாலைகளை ₹35 கோடி செலவிலும், 7 கி.மீ நீளம் கொண்ட 124 சாலைகளை ₹4.28 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 307 கி.மீ நீளம் கொண்ட 2,084 சாலைகளை ₹190 கோடி செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi