Tuesday, May 21, 2024
Home » சென்னை நீதிபதி உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்

சென்னை நீதிபதி உள்பட உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்

by kannappan

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உள்பட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் கடந்த மாதம் நடந்த கொலிஜியம் கூட்டத்தில் நீதிபதிகள் பதவி உயர்வு, இடமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதனை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி 11 உயர்நீதிமன்றங்களை சேர்ந்த 15 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உடனான ஆலோசனைக்கு பின்னர், 7 மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், ` சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் கொல்கத்தாவுக்கும், பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜன் குப்தா பாட்னாவுக்கும், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்வர் தாகூர் பஞ்சாப்பிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பஜாந்த்ரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய இருவரும் பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்நாத் கவுட் திரிபுரா உயர்நீதிமன்றத்துக்கும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்த் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கும் இடமாற்றம்’ செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ‘கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்’. இந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக 3 வக்கீல்கள் மற்றும் இரண்டு நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து  நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரிது ராஜ் அவாஸ்தி நேற்று பதவியேற்றுக்கொண்டார். …

You may also like

Leave a Comment

11 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi