Thursday, May 16, 2024
Home » சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை

by kannappan

ஐதராபாத்: தமிழில் ‘டான்’, ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து கே.வி.அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 20வது படம். இன்னும் பெயரிடவில்லை. தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரிட்டீஷ் நடிகை ஒலிவியா மோரிஸ், புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இதை படக்குழு உறுதி செய்யவில்லை.இந்நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஸப்கா என்ற நடிகை சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர், உக்ரேனிய படமான ‘எடர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi