Thursday, May 30, 2024
Home » கோவங்காடு தார் சாலை பணி ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

கோவங்காடு தார் சாலை பணி ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

by Karthik Yash

ஏரல், மே 23: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இருந்து கோவங்காடுக்கு ₹168.16 லட்சத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏரல் அருகே தூத்துக்குடி-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இருந்து கோவங்காடு செல்லும் சாலையானது ₹168.16 லட்சத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணியினை நேற்று மாலை வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோட்டாளம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபாகரன், கிளை நிர்வாகிகள் பழையகாயல் ஜாண்சன், வாழவல்லான் பாலகிருஷ்ணன் மற்றும் அகரம் பாஸ்கர், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், வைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் ஏரல் தாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், தகவல் தொழில்நுட்ப லெட்சுமணன், கோவங்காடு கிராம கமிட்டி தலைவர் பால்ராஜ், பழையகாயல் பொன்னம்பழம், சித்திரைவேல், விவேகானந்தன், ரவீந்திரன் மற்றும் கோவங்காடு பஞ்சாயத்து தலைவர் முனியாண்டி, துணைத் தலைவர் சின்னத்துரை, வைகுண்டம் உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன், ஆர்.ஐ தனலெட்சுமி, சாலை பணியாளர் வேல்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi