கோபி: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையில் கோபியில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.என்.நல்லசாமி தலைமையில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் இளைஞர் கோபி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் காசிபாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோதண்டன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பிரனேஷ், கோபி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துஜா வெங்கடாசலம், ராகவேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.