Friday, May 17, 2024
Home » கோடை கால இலவச பயிற்சி மாவட்ட அணிக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

கோடை கால இலவச பயிற்சி மாவட்ட அணிக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

by Ranjith

 

காரைக்குடி, ஏப். 17: காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைகால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. மே 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை காரைக்குடி அழகப்பா உடற்கல்வித்துறை பி வலைப்பயிற்சி மைதானத்தில் நடக்கவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கான வயது வரம்பு 13 முதல் 19 வயது வரை இருக்க வேண்டும்.

அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் அணிக்கான சிவகங்கை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி அழகப்பா உடற்கல்வி பி வலைப்பயிற்சி மைதானத்தில் நடக்கவுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களின் வயது வரம்பு 2008 செப்.1ம் தேதி அன்றோ, அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். அதேபோல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் அணிக்கான மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு அழகப்பா உடற்கல்வி பி வலைப்பயிற்சி மைதானத்தில் நடக்கவுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் 2005 செப்.1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். தேர்விற்கு வரும் போது வெள்ளை சீருடை, ஷீ அணிந்து வர வேண்டும். தவிர, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் நகல் மற்றும் பள்ளி, கல்லூரி சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான விபரங்களுக்கு 7010325125, 9442433334 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi