சென்னை: தமிழகத்தில் காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், காலணி தயாரிப்பு தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.4,933 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சமாக ரூ. 4,843 நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், நிர்வாக பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,248 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ட ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஏதேனும் இடத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை விட, அதிகமான தொகை தற்போது வழங்கப்பட்டு வந்தால் அதையே தொடர வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது….