குர்கிராம்: அரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ், நேற்று குண்ட்லி – மானேசர் – பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் குர்கிராமை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவரது காரின் பின்னால் பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. இந்நிலையில் அமைச்சர் சென்ற காரின் ஷாக் அப்சர் திடீரென கட்டானதால், கார் கட்டுப்பாட்டை இழந்தது. காரின் டிரைவர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதனால் பெரும் விபத்தில் இருந்து அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது அதிகாரப்பூர்வ காரில் சென்று கொண்டிருந்த போது காரின் ஷாக் அப்சர் இரண்டு துண்டுகளாக கட்டானது. இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். காரை டிரைவர் பட்டறைக்கு எடுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கட்சித் தலைவர் கன்ஷியாம் சராப்பின் காரில் எனது பயணத்தைத் தொடர்ந்தேன்’ என்று கூறியுள்ளார். …
கார் விபத்தில் உயிர் தப்பிய பாஜக அமைச்சர்
previous post