கோவில்பட்டி, ஜன. 25: கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள வீரமாமுனிவர் சிலைக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பசிலிக்கா அருட்தந்தை அந்தோணிகுரூஸ், கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், பழனிசாமி, செல்வகுமார், கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் போடுசாமி, பாசறை செயலாளர் கவியரசன், நகராட்சி கவுன்சிலர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.