சென்னை: காமெடி வேடங்களில் நடித்த சந்தானம், தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். இதுவரை தமிழில் மட்டுமே நடித்த அவர், தற்போது கன்னடப் படத்தில் அறிமுகமாகிறார். தமிழிலும் உருவாகும் இப்படத்துக்கு ‘கிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் ஹிட்டான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இயக்குகிறார். சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் தம்பி ராமய்யா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா நடிக்கின்றனர். பிரசாந்த் ராஜ் கூறுகையில், ‘வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக்தான். விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் ஹீரோ, ஒவ்வொரு செயலையும் கிக்காக செய்ய நினைக்கிறார். இந்நிலையில், இன்னொரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் ஹீரோயினும், அவரும் தொழில்முறை போட்டியால் எலியும் பூனையுமாக மோதிக்கொள்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழுநீள காமெடியுடன் சொல்லும் படமாக உருவாகிறது’ என்றார்….
கன்னடத்தில் அறிமுகமாகிறார் சந்தானம்
previous post