Saturday, May 11, 2024
Home » ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

by Mahaprabhu

ஒட்டன்சத்திரம், ஆக. 20: ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. நகர் மன்ற துணை தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளா்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் முன்னிலை வகித்தனர். விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்க அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் அய்யம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வேதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், சிறப்பு ஆசிரியைகள் செல்லாயி, சரளா, தசை பயிற்றுனர் திவ்யா மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

four + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi