Wednesday, May 22, 2024
Home » உக்கம் பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் 13ம் தேதி 108 கோபூஜை

உக்கம் பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் 13ம் தேதி 108 கோபூஜை

by kannappan

காஞ்சிபுரம்: உலக நன்மைக்காக, உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் வரும் 13ம் தேதி 108 கோபூஜை நடக்கிறது. காஞ்சிபுரம் –  வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும், தை மாதத்தில் உலக நன்மை, குடும்ப நன்மை, செல்வம் பெருகவும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், 108 கோ பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். இதைதொடர்ந்து, வரும் 13ம் தேதி காலை, 7 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மகாலட்சுமி குபேர ஹோமம், 10.30 மணிக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேதே சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். காலை, 11.45 மணிக்கு 108 கன்றுகளுடன், பசுக்களை இடம்பெற செய்து கோபூஜை நடக்கிறது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான மகாதீபாராதனை நடத்தப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும்….

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi