Friday, May 10, 2024
Home » ஆர்.கே.பேட்டை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச கழிப்பறைகள்

ஆர்.கே.பேட்டை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச கழிப்பறைகள்

by Ranjith

 

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு குளியலறையுடன் கூடிய கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வி.புதூரில், சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஓராசிரியர் பள்ளிகள் சார்பில் பைவ் ஸ்டார் பைனான்ஸ் நிறுவனம் உதவியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 15 குடும்பங்களுக்கு ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் குளியறையுடன் கூடிய கழிப்பறைகளை கட்டிமுடித்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பைவ் ஸ்டார் பைனான்ஸ் மேலாளர் சிவராம கிருஷ்ணன் தலைமை வகுத்து பயனாளிகளுக்கு குளியல் அறையுடன் கூடிய கழிப்பறைகள் ஒப்படைத்து சான்றிதழ்கள் வழங்கினார். முன்னதாக ஓராசிரியர் பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்க தூய்மை இந்தியா திட்ட பொறுப்பாளர் வைத்தியநாதன், திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

ஓராசிரியர் பள்ளியின் கள ஆய்வாளர் வெங்கடேஷ், தலைமையக அதிகாரி சதீஷ், சோளிங்கர் கள மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஆசிரியர்கள் ராமு, தமிழ் செல்வி, குமாரி, ஊராட்சி மன்ற தலைவர் வேணு, துணை தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சோளிங்கர் கள மேற்பார்வையாளர் பாரதி நன்றியுரை ஆற்றினார். மேற்படி நிறுவனத்தின் உதவியுடன் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 211 குளியறையுடன் கூடிய கழிப்பறைகள் ரூ.1.10 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

20 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi