ஒட்டன்சத்திரம், மே 8: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நகர திமுக சார்பில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்து 2 ஆண்டு சாதனை விழாவையொட்டி சாதனை விளக்க கண்காட்சி மற்றும் வீடியோவை நகராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் மோகன், நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.