ஈரோடு,மே26:மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாஸ் கிளீனிங் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முக்கிய சாக்கடைகள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் வகையில் மாஸ் கிளீனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.முதல்கட்டமாக மெயின் ரோடுகளில் உள்ள பெரிய சாக்கடைகளை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் சாலையில் உள்ள சாக்கடையானது தூர்வாரப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து செல்கின்றது.
இதை தடுக்கும் வகையில் நேற்று மேட்டூர் ரோட்டில் தூய்மை பணியாளர்கள் சாக்கடையை முழுமையாக தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். மெயின் ரோட்டில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்பட்ட பிறகு வீதிகளில் உள்ள சாக்கடைகள் முழுமையாக தூர்வாரப்படும் என்றும், காலியிடங்களில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்படும் என்று மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறினர். ராஜா 01,02,03 ஈரோடு மேட்டூர் சாலையில் மாநகராட்சி சார்பில் மாஸ் கிளினிங் முறையில் கழிவுநீர் சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுட்டுள்ள தூய்மை பணியாளர்கள்.