சென்னை: டிஎன்பிஎஸ்சியின் “X ” பக்கத்திலும் அதிகாரப்பூர்வ தேர்வுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான இடங்களை தேர்வு மூலம் நியமித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் தகவல்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு (டிவிட்டர்) “TNPSC_Office ” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேர்வாணையம் வெளியிடும் தேர்வு தொடர்பான தகவல்கள் அனைத்தும் இந்த ‘X’ கணக்கிலும் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் ேகாபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்திலும் தேர்வுகள் தொடர்பான தகவல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
previous post